புதன், 7 மார்ச், 2018
ஞாயிறு, 4 மார்ச், 2018
சனி, 3 மார்ச், 2018
வெள்ளி, 2 மார்ச், 2018
விழியா? உளியா?
சிற்பிகளுக்கு!
கல்லை கண்டதும் சிற்பம் தெரிகிறதாம்
சிலாகித்துக் கொள்கின்றனர்!
பாவம்! அவர்கள் - இதுவரை
உன்னை பார்க்கவில்லை!
பார்த்திருந்தால் தெரிந்து இருக்கும்
யார் சிற்பி! என்று,
உன்னை நோக்கி
சிலையாய் அவர்கள் நிற்கும் போது.!
உன் விழியே
உலகின் சிறந்த உளி என்று அறியும்
அக்கணம் முதல் - அவர்களின்
தலைக்கணம் அழிப்பர்.!
ஞாயிறு, 25 பிப்ரவரி, 2018
சனி, 24 பிப்ரவரி, 2018
செவ்வாய், 20 பிப்ரவரி, 2018
விழி வழி
அழகு ஓவியமே
உடல் உலகை வியந்து சுற்றினாலும்
உள்ளம் உன் வில்லின் வழி வரும்
அம்பில் அகப்படவே அலையாய் ஆர்ப்பரிக்கிறது
அம்பில் அகப்படவே அலையாய் ஆர்ப்பரிக்கிறது
நெஞ்சு உன்நிலவின் பூகம்பத்தால் அதிர்வதற்கே
பூக்களோடு உனைநோக்கி புலம்புகிறது
பூக்களோடு உனைநோக்கி புலம்புகிறது
ஊமை தான் என்றாலும்
பேசும் உன் வார்த்தையில்
துஞ்சவில்லையே என்நெஞ்சும் கண்ணே
பேசும் உன் வார்த்தையில்
துஞ்சவில்லையே என்நெஞ்சும் கண்ணே
உயிரே உன் கருவிழி காந்தத்தின் ஈர்ப்பில்
கவர்ந்தாய் என்னை காட்சிகளையும் மறந்தேனடி
இமைக்கவும் முடியாமல் இயங்கவும் முடியாமல்
உன் மயக்கும் மந்திரதால் மாண்டேனடி
கவர்ந்தாய் என்னை காட்சிகளையும் மறந்தேனடி
இமைக்கவும் முடியாமல் இயங்கவும் முடியாமல்
உன் மயக்கும் மந்திரதால் மாண்டேனடி
இறக்கத்தோடு ஒறுமுறை காட்டடி கள்ளியே
எனை கவர்ந்த கண்ணியை காட்டடி கன்னியே
உனை கொணர்ந்துவிட வழி காட்டடி கனியே
எனை கவர்ந்த கண்ணியை காட்டடி கன்னியே
உனை கொணர்ந்துவிட வழி காட்டடி கனியே
இறக்கவிடு மறுமுறை அளக்கமுடியாவுன் நிலஒளியால்
என்னை உன்னில் இறக்கி விடடி முழுமதியால்
உன்னை என்னிடம் இழந்து விடடி விழிவழியால்
உன்னை என்னிடம் இழந்து விடடி விழிவழியால்
எதுவென் மனதினையேற்ற ஒளி என்றறியாதிருந்தேன்
இதோவுன் விழிவழி நீ உணர்த்தியதும் அறிந்தேன்
இதோவுன் விழிவழி நீ உணர்த்தியதும் அறிந்தேன்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)






