வியாழன், 15 ஆகஸ்ட், 2019

பெண்ணோடு தவம்





முன்பு அறிமுகம் இல்லாத (முகத்தையும் முழுவதும் பார்க்காத)
பெண்ணின் மீதான ஈர்ப்பில் 
ஒரு முறை அவளை முழுவதும் பார்த்துவிட ஏங்கிய 
இதயத்தில் கரைந்த கவிதை படிக்காத தேர்வில் 
என் உணர்வுகளை கொண்டு தமிழ் படைக்கலாம் என்ற முயற்சியில்
தேர்வு அறையில் இருக்க (எழுத) தொடங்கியது தான் இந்த

பெண்ணோடு_தவம்

சும்மா இருப்பதே நான் என்றான் சிவன்!
பகலில் பார்வதிகளின் பார்வை பாதித்து சென்றது,
இராத்திரியில் பார்நிலவின் எழில் எழுதவைத்தது
விடிந்து தேர்வரை நோக்கி வந்தேன் தவமிருக்க....

தேவி உன் சிலை கண்டேன் இருந்தவாறு
கண் மூடியும் உன்விழி காந்த அலை என்னுள்ளத்தில்
இமைகளுடன் சண்டையிட்டுக் கொள்ளும்
நாழிகையில் இருக்கிறேன் தவம்.
சிவனோடு அல்ல, என்னை நோக்கி சிரிப்பாய் என்றே!

உன் காதின் சிமிக்கி என் கண்ணில் கல்வெட்டாய்!
உன் கண்ணத்தின் மச்சமோ என் கருவிழியாய்!

உன் பௌர்ணமி முகத்தின் அரைவட்டத்தின் தரிசனத்தோடு
நான் உன்னை நினைத்து எழுத -  நீயோ
சிவனேன் என்று, அவன் ஈந்த தமிழையை எழுதுகிறாய்!

என் தமிழ்ச்செல்வியே!
காத்துக்கிடக்கிறேன் என் பேனா மையோடு மையல்கொண்டு 
உன் முழு தரிசனத்தின் காட்சியை வரியில் வடிக்க...

கணநேர உன் பார்வை கொண்டு உணவளிப்பாயா?
என் இதயத்தில் ஓயாமல் அடிக்கும் அலைகளுக்கு
சற்றேனும் அமைதியாய் அமர அருள்தாரும் அழகே!

நீ எழுதும் போது கொட்டும் வார்த்தையில் என் சிந்தனை படராதோ?
உன்விரல் வலிக்கும் போது இடைவேளைக்காக
என் கரம் தேடாதோ? சற்றேனும் சங்கமமாக!

மேசையின் மீது அழுத்தும் உன் தேகம்
வலியில் என் மீது சாயாதோ?,
தென்றல் மோதிய மோகத்தை நான் பருக!

காற்றில் ஆடும் உன் கூந்தல் போல - என் காதலையும்
உன்னுள்ளத்தில் ஆட அழைக்காதோ? அன்பே!

அடிக்கடி சுனாமி ஏற்படுகிறது என்னில்,
என் பார்வையில் இருந்து உன்னை மறைக்கும் உன் தோழியால்.

சில நேரம் குழப்பத்தில் நான், இயற்கை எழில் வந்துவிடுகிறது
உன்னழகின் தரிசத்திலிருந்து என் பார்வையை பறிக்க
பாவம் அவை அறியாது தென்றலுக்கு முன்
சுவாசகாற்றும் உயிரற்றதென்று...!!!

இவை இறந்தது போலவே
உன்னுள் நானும் இறந்துவிட கூடாதென்றா!
ஓயாமல் ஓசையெலுப்புகிறது இறந்த இம்மர சன்னல்!

உன்னோவிய மூக்கின் நூனியில் தவழும் தனல்!
உன்காதல் நோயில் உறைந்த என் சடலத்தை உயிப்பிக்காதோ?

உன் கழுத்தில் துப்பட்டாவாக
என் சுவாசம் ஊசலாடுகிறது ஒவ்வொரு கணமும் காற்றில்!

உன் கைவிரலில் மாட்டிக்கொண்ட பேனாவாக
என் சிந்தனையும் விடுதலையற்று
உனக்குள்ளேயே மாட்டித்தவிக்கின்றதே!

உன் பாதத்தின் குதிகால் முதல் விரல்கள் வரை
பின்னி இருப்பதை போலவே
என்னையும் உன்னை பற்றி எழுத  பின்னிப்போட்டதில்
எழுத்துக்களுடன் போர் இடைவெளியற்று நீள்கிறதே........!

என்னை மெட்டியாகவே மாற்றிவிட்டது
உன் கால் விரலின் எழில்! - எப்போது
என்னை மாட்டப்போகிறாய்? ஆயுளுக்கும் உன்னுள்!

உன் சின்ன உதட்டின்! சிறையில் அடைத்த சீவனாக நான்,
எனக்காக எப்போது திறக்கும்? சிறைக்கதவு என்றே
விடுதலைக்கு அடுத்த காட்சிகளின் கனவில்,
நான் கரைந்து கொண்டிருக்கிறேன் உன்னிதழோடு!

பகல்தான் என்றாலும்
இராத்திரி வந்ததோ என்ற ஐய்யம் எனக்கு
இரவில் நட்சத்திங்களை விழுங்கிய
மயக்கும் மாய நிலவாய்! நீ! தெரிவதால்...


மின்விசிறி கீச்சல்களும்
என்னுள் கீதங்களாய்! ஒலிக்க
உன்னை நோக்கி என் தவம் அமைதியாய்....!

நீயும் எழுதுவதை நிறுத்துவதாய் இல்லை...
நானும் நிறுத்துவதாய் இல்லை....
உன்காய் நான் எழுதுவதை...!!!

இப்படி விருப்பத்தோடு தேர்வெழுதியது
இதுவே முதல்முறை
நிறுத்தாமல் எழுதுவேன்
நீ இப்படியே என்பார்வையில் அமர்ந்திருந்தால்!!!

என்னை படைப்பாளியாக்கிய!
உன்னை பற்றிப் படைப்பதற்காகவே!!
நான் இருப்பேன் தவமாய்!!!
என்றும் தேர்வறை நோக்கி...!!!

வெள்ளி, 26 ஜூலை, 2019

மழையோடு நான்



தொடவும் மனமில்லை 
பிரியவும் மனமில்லை
தொடரவும் நேரமில்லை

காதலா? காமமா? புரியாமல்!
மழையோடு நான்.

தாரம் இல்லா இரவின் தாக மழை



மழைக்கு! ஏது?
கண்ணும்! காதும்!
இருந்திருந்தால் தினமும்
மின்னல் எடுத்த நிழற் படத்தில்!
இடி ஒலித்த பறையின் ஓசையில்!

மழையில்
வருகையின் வாடையில்
என்னவள் உடன் இல்லாமல்
நான் மட்டும் தனிமையில்
தவிக்கும் நிலை கண்டும்

மெல்லிய சாரலின்
தொடுதல் கூட,
ஊசியினை போல்
குத்தி காயப்படுத்துவது அறிந்தும்

வளிமண்ட வெப்பம் இறந்த பொழுதில்
என் உடலில் தணல் தனிந்து
குளிர்ந்த காற்றோடு
போரிட்டுக் கொண்டிருந்த
எந்தன் மூச்சுக் காற்றின் ஈரம் அறிந்தும்

என்னை துரத்துவதை நினைந்து
வருந்தி இறந்திருக்குமே - இல்லை
வானில் இருந்து பூமியினை நோக்கி
இறங்காமலாவது இருந்திருக்குமே

இப்படி இரக்கமற்று
அர்த்த ராத்திரியில்
தினந்தோறும் தொடர்ந்து வந்து
என் இதயத்தின் இயக்கத்தை
இம்சை செய்திருக்காதே.....!

வியாழன், 25 ஜூலை, 2019

ஆற்றல்



ஆற்றலின் 
அழிவின்மை விதியும்
காதலும் ஒன்றோ என்ற ஐயம்!

தன் நிலையினை 
இழந்த பின்னும் - ஏன்?
இறந்த பின்னும்

இரண்டும்
எங்கோ? ஏதோ? 
ஒரு விதத்தில் 
உயிரோடு உலவிக் 
கொண்டிருக்கின்றதே....!

இராட்சசிகள்






பெண்ணுக்கான
ஆணின் தியாகத்தில்
இயற்கையின் முழு சொத்துக்களும்
அபகரிக்கப்பட்டுவிட்டன,

பெண்பால் இல்லா
கவிதைகளும் இல்லை
பெண் புகழ் இல்லா
இயற்கை வர்ணனையும் இல்லை.

அன்பும் வீரமும் மட்டுமே
ஆணின் கல்வெட்டுகளாய்
ஆழப்புதைத்து வைத்து வேடிக்கை பார்க்கும்
#இராட்சசிகள் நிறைந்த பிரபஞ்சம் இது.

புதன், 24 ஜூலை, 2019

காக்கை குருவி எங்கள் சாதி







சாதி மத இன
பற்று என்ற போர்வைக்குள்ளே
பரவி இருந்த விசம் அருந்தி
வீழ்ந்து விடாமல்
கடந்து வந்த அனுபவங்கள்.

அவை யாவும்
மனிதனை மனிதன்
ஒடுக்கவும் ஒதுக்கவும்
உயர்வு தாழ்வை விதைக்கவும் செய்கிறது என்ற
உண்மையை ஏற்பார்கள்

அதை கடந்து வந்து
உயிரை நேசிக்கும் பாதையை
ஒரு போதும் பின் தொடர மாட்டார்கள்.

பிறக்கும் போது
பெற்றோர் இரத்தமே மாறித்தான்
குழந்தை பிறக்கிறது.

இருந்தும்
வளர்ந்த மிருகங்களாய் 
வலம் வருவதை
மாற்ற மட்டும் ஏனோ 

மனம் இருப்பதில்லை.

நாஆர்த்திகன்




என் வாழ்க்கை
என் கையில் என்று 
சொல்லிக் கொண்டே
சென்றார் அத்திவரதரை தேடி.....